இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.(மத்தேயு 7:13) |
எந்த சபைக்கு போகிறோம் என்பது முக்கியம். ஏனெனில் சில வேதபுரட்டர்கள் இருக்கும் இடங்களுக்கு போகக்கூடாது. பைபிளுக்கு முரண்பாடாக இருப்பின் அந்த சபைக்கு செல்லவேண்டாம்.
சில இடங்களில் "செல்வச் செழிப்பு பற்றிய சுவிசேஷம் (Prosperity Gospel)" போதிக்கின்றனர். இப்படிப்பட்ட போதர்களை நாம் தொலைக்காட்சிகளில் (குறிப்பாக அமெரிக்காவில்) காணலாம். இவர்கள் "கர்த்தர் உங்களை பணக்காரராக்குவார்" என்ற ஒரே கருத்தை மையமாக வைத்து போதிக்கிறார்கள். சரியாகச் சொன்னால்: இவர்கள் தங்களது பரமதரிசனத்தை தொலைத்தவர்கள். இவர்கள் கிறிஸ்து இயேசுவின் சிந்தையை இழந்து தங்களுக்கு ஆக்கினையை வருவித்துக்கொள்கிறார்கள். பேதுரு சொல்லும்போது (II பேதுரு 2:1) கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள் என்று சொல்கிறார்.
இன்னும் சில போதகர்கள் தொலைக்காட்சிகளிலேயே புகைபிடித்து (Cigar), சிலர் எப்போதாவது குடித்தால் தவறல்ல என்றும் பிரசங்கம் செய்கின்றனர். சிலர் சபைக்கு கூட்டத்தை இழுக்க அங்கேயே பந்தயவிளையாட்டுகள், ஆடையலங்கார போட்டிகள்... போன்றவைகளுக்கு இடம் கொடுக்கின்றனர். அங்கே சென்றால் இது சபையா அல்லது கடைத்தெருவா (Shopping Mall) என்று தோன்றும் அளவுக்கு உலகம் உள்ளே நுழைந்துள்ளது. ஷாப்பிங் போவதற்காக சபைக்கு போகிற சிலர் ஒருபுறம் இருக்க ஜனங்களுக்கு எதற்கு சபைக்கு வருகிறோம், நாம் ஏன் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டோம், நம் வாழ்வின் நோக்கம் என்ன, என்பதெல்லாம் மறந்து உலகத்தார் போல இருக்கும் இடங்களும் உண்டு.
அப்படிப்பட்ட இடங்களை விட்டு விலகவேண்டும் என்று மிகவும் அழுத்தம் திருத்தமாக கூறிக்கொள்கிறேன்.
இயேசுவைக் குறித்து பார்க்கும்போது: இவர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவன். அப்படிப்பட்ட தேவன் பூமியில் எப்படிப்பட்ட இடத்தில் பிறக்கவேண்டும் என்று சிறுவர்களிடம் பல பதில்கள் கொடுத்து, அதில் ஒன்றை தேர்வுசெய்யச் சொன்னேன்: இவர் ஒரு பளிங்கினால் உண்டாக்கப்பட்ட மாளிகையில் வைரம், இரத்தினம் என விலையேறப்பெற்ற கற்களால் செய்யப்பட்ட ஒரு அறையில் பிறந்திருக்கவேண்டும் என்று எல்லாரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் இவர் தான் பிறக்க தேர்வு செய்த இடம் மிகவும் என்னை இதயத்தை உருக்கியவைகளில் ஒன்று! வானங்கள் மற்றும் பூதலத்தின் மன்னாதி மன்னவன் பாதங்கள் தொட்ட இடம், சத்திரத்தில் இடமில்லை, எனவே ஒரு தொழுவத்தில் [Manger - கால்நடைகளுக்கு தீவனம் போடும் இடம்]. தனது பிறப்பில் தாழ்மையின் உச்சத்தை சொல்லாமல் சொல்லியிருக்கிறார். (இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே என் உள்ளம் உடைகிறது.) இவர் 99 ஆடுகளை வனாந்திரத்திலே விட்டுவிட்டு காணாமல் போன அந்த ஒரு ஆட்டை தேடிச் சென்ற நல்ல மேய்ப்பன் போன்றவர். சீஷர்களுக்கு எளிமையை சொல்லிக்கொடுத்தார்: "வழிக்குத் தடியையாவது பையையாவது அப்பத்தையாவது காசையாவது எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு அங்கிகளைக் கொண்டுபோகவும் வேண்டாம்... உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்" என்றார். காரியம் இப்படியிருக்க "இயேசுவிடம் வாருங்கள் அவர் உங்களை பணக்காரராக மாற்றுவார்" என்று பிரசங்கம் செய்வது தவறு. கர்த்தர் தமது பிள்ளைகளுக்கு ஆசீர்வாதத்தை தருவார். ஆனால் அதைத்தான் பிரசங்கம் செய்தால். சுவிஷேசம் அதுவல்ல. சுவிஷேசம் என்பது யோவான் 3:16; எனவே தவறாக பிரசங்கம் செய்யும் இடங்களுக்கும் சபைகளுக்கும் செல்லவேண்டாம்.
நாம் வேறு சபைக்கு போகவேண்டும் என்றால் ஒன்று அந்த சபை இதைவிட ஆவிக்குரிய காரியங்களில் மேலாக இருக்கவேண்டும். அல்லது தற்போது இருக்கும் சபையில் ஏதோ உங்களுக்கு பிடிக்கவில்லை. அல்லது சில சபைகளில் சமுகசேவை, சுவிசேஷ ஊழியம் சிறப்பாக செய்கின்றனர். அப்படிப்பட்ட காரியங்கள் சிலரை ஈர்க்கலாம். தேவனுடைய வரம் பெற்ற போதகரை சந்திக்க போவது தவறல்ல. ஆனால் உங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் தடங்கள் வருமா வராதா என்பது செல்லும் சபையைப் பொறுத்தது.
Source:http://tamilbibleqanda.blogspot.com
2 கருத்துகள்:
நானும் மாரநாதா பாஸ்டர் தான்
மேலாயுரில் ஊழியம் செய்கிறேன் .
MY LINK
மாரநாதா ஜெப ஆலயம்
நானும் மாரநாதா பாஸ்டர் தான்
கருத்துரையிடுக