பரிசுத்த வேதாகமத்தை நாம் கவனத்துடனும், கருத்துடனும் வாசிக்க வேண்டும். வேதத்தை வாசிக்கும் போது நமக்கு
பிரியமான அல்லது பயனுள்ள வசனங்களை அடிக்கோடிடும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஒருமுறை வாசித்த ஒரு வசனத்தை எளிதாக மீண்டும் எடுத்து பார்ப்பதற்கு இது வசதியாய் இருக்கிறது.
பரிசுத்த வேதாகமத்தை வாசிக்கும்போது எப்பொழுதும் பேனா அல்லது பென்சில் வைத்துக் கொண்டு வாசிப்பது நல்லது. வேதாகமத்தில் குறித்துக் கொள்ளவும், கோடு போடவும், எழுதிக் கொள்ளவும், அவைகள் உதவியாக இருக்கும். வெவ்வேறு வண்ண பென்சில்களைப் பயன்படுத்தியும் குறிக்கலாம். வேதாகமத்தில் வெறுமனே கொடுபோடுவதைக் காட்டிலும் குறிப்பிட்ட விதத்தில் குறித்துக் கொள்வதும், அடையாளக் குறியீடுகளை பயன் படுத்துவதும் மிகவும் சிறந்தது.
பரிசுத்த வேதாகமத்தில் 1189 அதிகாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரத்திலும் ஏதாவது ஒரு செய்தி முக்கியமாக அல்லது பிரதானமாக காண்ப்படுகிறது. அதைக் கண்டுபிடித்து அதைத் தலைப்பாக அதிகாரத்தின் ஆரம்பத்தில் எழுதிக்கொள்ள வேண்டும். அந்த தலைப்பை மனதில் நன்றாகப் பதித்துக் கொள்ள வேண்டும்.
வேதாகமத்திலுள்ள பகுதிகளை எளிதாக நினைவிற்கு கொண்டுவர இது மிகவும் உதவியாக இருக்கிறது.
நீங்கள் வேதகமத்தில் ஒரு அதிகாரத்தை வாசிக்கும்போது எப்பொழுதும் கீழ்க்காணும் 3 குறிப்புகளை மனதில் கொண்டு வாசிக்கவும். இந்த ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில்களை கண்டுபிடிக்கும் வகையில் வாசிப்பீர்கள் என்றால் நீங்கள் வேதத்தை வாசிப்பது பயனுள்ள ஒரு அனுபவமாக மாறிவிடும்.
நீங்கள் வேதகமத்தில் ஒரு அதிகாரத்தை வாசிக்கும்போது எப்பொழுதும் கீழ்க்காணும் 3 குறிப்புகளை மனதில் கொண்டு வாசிக்கவும். இந்த ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில்களை கண்டுபிடிக்கும் வகையில் வாசிப்பீர்கள் என்றால் நீங்கள் வேதத்தை வாசிப்பது பயனுள்ள ஒரு அனுபவமாக மாறிவிடும்.
1. முக்கிய செய்தி என்ன?
2. பத்திப் பிரிவுகள் யாவை?
3. உங்களுக்கு பிரியமான வசனம் எது?
2. பத்திப் பிரிவுகள் யாவை?
3. உங்களுக்கு பிரியமான வசனம் எது?
- courtesy :- Dr.Selwyn , Oddanchatram .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக