எந்த சபையில் ஞானஸ்நானம் எடுக்கிறோமோ, அந்த சபைக்குத்தான் போகவேண்டுமா?
அப்படி வேதத்தில் எங்கும் சொல்லவில்லை. ஆவியானவர் எங்கே உண்டோ அங்கே விடுதலையுண்டு. எங்கே இரண்டு அல்லது மூன்றுபேர் என் நாமத்தினால் கூடியிருக்கிறார்களோ அங்கே நான் இருக்கிறேன். சபை கூடுதலை விட்டு விடாதிருங்கள் என்று வேதம் தெளிவாக கூறுகிறது
[ஒரு சிறு குறிப்பு: I கொரிந்தியர் 10:2 எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள். எனவே ஞானஸ்நானம் செங்கடலை கடக்கும் அனுபவத்திற்கு நிழலாட்டமாயிருக்கிறது. செங்கடலை கடந்தபின் எப்படி வனாந்தரவழியாய் இஸ்ரவேல் ஜனங்கள் போனார்களோ அப்படியே கர்த்தர் சில சோதனைகள் வழியாய் நம்மை வழிநடத்தி, நம்முடைய இருதயத்திலுள்ளதை நமக்கு காட்டுவார். அவைகளை நாம் திருத்திக்கொண்டு கானானுக்குள் (பரலோகம்) பிரவேசிப்போமாக. உபாகமம் 8:2 உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக