இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
(வெளிப்படுத்தல் 3:20)

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

உயிர்த்த ஞாயிறு

உயிர்த்த ஞாயிறு அல்லது பாஸ்காஇயேசுவை பின்பற்றுபவர்களின் நம்பிக்கையின் படி
 கி.பி.27-33 இல் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து உயிர்த்ததை குறிக்கும் முகமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. இது கிறிஸ்தவ வருடத்தில் மிக முக்கியமான திருநாளாகும். இது ஆண்டின் மார்ச் கடைசி முதல் ஏப்ரல் கடைசி வரையான காலப்பகுதியில் வழமையாக வருகின்றது. இந்நாள் புனித வெள்ளிக்கிழமையில் இருந்து மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இது எட்டு நாள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.

கருத்துகள் இல்லை: