என்றைக்காவது உன்னைப் படைத்த கடவுளிடம் நீர் நண்பனாக பழக முடியும் என்று நினைத்துப் பார்த்திருக்கின்றாயா? கடவுளைப்பற்றி சிந்திக்கும் போதெல்லாம் அவரைத்
தெய்வமாகவும், இராஜாவாகவும் உலகைப் படைத்தவராகவும் நம்மை சிருஷ்டித்தவராகவும் நீதிபதியாகவும் நாம் எண்ணுகிறோம். இன்னும் சிலர் அவரை காப்பவனாக அழிப்பவனாக உருவாக்குபவனாக எண்ணுகின்றனர். இன்னும் சிலர் அவருக்கு பயந்து அஞ்சி நடுங்குகின்றனர். ஆனால் அவரிடம் நீ ஒரு நண்பனாக பழக முடியும் என்ற எண்ணம் ஏற்படாதல்லவா. ஆனால், நாம் தேவனோடு நண்பர்களாக இருக்க முடியும் என்று வேதாகமம் தெளிவாக சொல்லுகின்றது. ஆகவே சற்று இங்கு நில்!
ஒவ்வொரு நாளும் சற்று
அமர்ந்து வேதாகமம் என்ன சொல்லுகிறது என்பதை நீ வாசித்துப்பார்! அதை
தொடர்ந்தும் வாசித்துக்கொண்டிரு! நீ நிற்க வேண்டிய இடம் அதுவே!
வேதாகமத்திற்கு முன் நீ நின்று பழகு. நீ கடவுளுடன் நட்புடன் பழக அது உன்னை
பயிற்றுவிக்கும்.
யாக்கோபு 2:23 ல் ஆபிரகாம் தேவனுக்கு சிநேகிதன் எனப்பட்டான்.
யாத்திராகமம் 33:11 ல் சிநேகிதனுடன் பேசுவது போல தேவன் மோசேயுடன் பேசினார்.
மத்தேயு 11:19, லூக்கா 7:34 ல் இயேசு பாவிகளுக்கும் ஆயக்காரருக்கும் சிநேகிதர் எனப்பட்டார்.
யோவான் 11:11 ல் இயேசு லாசருவை சிநேகிதன் என்றார்.
இயேசு தன்னைக்
காட்டிக்கொடுக்க வந்த சீடனான யூதாஸ் கா
ரியோத்தையும் பார்த்து இப்படிக்
கேட்டார். 'சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய்” என்று
மத்தேயு 26:50 கேட்டார். அதுமட்டுமல்ல, அவர் தம் அனைத்து சீடர்களையும்
பார்த்து, 'நான் உங்களை ஊழியக்காரர் என்று சொல்லுகிறதில்லை. உங்களை
சிநேகிதர் என்கிறேன்” (யோவான் 15:15) என்று உரிமையோடு கூறினார். அவ்வாறே, இயேசு தம்மை எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதை சீஷர்கள் உணர்ந்தே இருந்தனர்.
இந்த சிநேகத்தினைப்
பற்றி வாசிக்கும் போதெல்லாம் ஆண்டவரோடு நண்பனாக நீயும் நானும் பழக எவ்வளவு
ஒரு பொிய வாய்ப்பு இருக்கிறது என்பதை நீ உணர்கின்றாயா? ஆம், ஆண்டவர்
எம்மோடு நண்பனாய் பழக எப்பொழுதும் ஆயத்தம் உள்ளவராகவே இருக்கின்றார். “நான்
உங்களைச் சிநேகித்தேன் என்று கா;த்தா; சொல்லுகிறாh;.” (மல்கியா 1:1) இது
மாபெரும் உண்மையாகும்.
தேவன் தாம் படைத்த
ஏதேன் தோட்டத்தில், தாம் படைத்த ஆதாமோடும் ஏவாளோடும் நட்போடு பழகி வந்தார்.
ஆயினும் ஆதாமும் ஏவாளும் தமது 'கீழ்ப்படியாமையினால்” அந்த
நட்பினை விரைவில் உடைத்தனர். இன்றும் உலகில் பலர், இறைவனோடுள்ள நட்பை
உதாசீனம் செய்தே வாழுகின்றனர். நீயும் நானும் என்னச் செய்யப் போகின்றோம்?
நீயும்கூட ஆண்டவரோடு நண்பனாக பழக வேண்டுமென்றே வேதாகமம் போதிக்கின்றது.
அவரை உனது உற்ற நண்பனாக ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் உன் கையிலே
தான் இருக்கின்றது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக