இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
(வெளிப்படுத்தல் 3:20)

வியாழன், 28 நவம்பர், 2013

கிறிஸ்தவராக நாம் செய்கின்றோம்.........?


  திருச்சபைக்கு செல்வது, ஜெபிப்பது, நற்செய்தியை பகிர்ந்துகொள்வது இவையெல்லாமே கிறிஸ்தவராக நாம் செய்கின்றோம். இதற்குக் காரணம், நாம்
மதத்தை பெற்றுக்கொண்டிருப்பதினால் அல்ல. நாம் தேவனுடைய சாயலை, அவருடைய ஜீவனைப் பெற்றிருப்பதினாலேயே ஆகும்.

இதையே இயேசு எமக்குக் கொண்டுவந்து தந்துள்ளார். அவர் ஒருவரே தேவனைப்போன்ற வாழ்வையும் தராதரத்தையும் எமது ஆவிக்குள் தரத்தக்கவராக இருக்கின்றார். ‘திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பாபூரணப்படவும் வந்தேன்.’ (யோவான் 10:10).
ஆக, நாம் மறுபடியும் பிறந்திருந்தால், நீங்கள் தேவனுடைய தெய்வீக சுபாவத்தில் பங்குள்ளவராக இருக்கின்றீர்கள். அது உங்கள் வாழ்க்கைக்குள் வைக்கப்பட்டிருக்கின்றது!
தேவனுடைய சுபாவத்தை உங்களுடைய ஆவிக்குள் கொண்டிருப்பதுதான் கிறிஸ்தவம் ஆகும். அவருடைய நாடித்துடிப்பு உங்களுடைய நபத்துவத்தில் காணப்படுவதாக!

கருத்துகள் இல்லை: