இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
(வெளிப்படுத்தல் 3:20)

புதன், 27 நவம்பர், 2013

எது நமது பெலன்?

 
 
உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்தியபேரின்பமும் உண்டு. -  சங்கீதம் 16:11.
எமி கர்மைக்கேல் அம்மையார் இந்தியாவிற்கு வந்து அனாதைகள், இளவயதுள்ள விதவைகள் மற்றும் தேவதாசிகள் என்னப்பட்ட சிறுமிகளை வைத்து 50 வருடங்களுக்கு மேலாக காப்பகம் வைத்து நடத்தி வந்தார். இன்றும் டோனாவூரில் அந்த காப்பகம் நடைபெற்று வருகிறது. வயதான காலத்தில் சிலமுறை கீழே விழுந்ததால் எலும்பு முறிவு ஏற்பட்டு, தனது கடைசி இருபது வருடங்கள் படுத்த படுக்கையாகிவிட்டார்கள்.
.
அப்படியிருந்தும் அவர்கள் படுக்கையிலிருந்தபடியே அநேக புத்தகங்களையும், பாடல்களையும் கவிதைகளையும் எழுதினார்கள்.  அது அநேக ஆயிரங்களுக்கு ஆறுதலை கொண்டு வந்தது.
.
தனது உதவியற்ற நிலைமையிலும் அவர்கள் கர்த்தருடைய பிரசன்னத்தை அனுபவித்தார்கள். “கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்தே தமது பெலன்”  என்று அவர்கள் மகிழ்ந்திருந்தபடியால் அவர்களுடைய படுக்கைக்கு அவர்களை காணச் சென்றவர்கள் தேற்றப்பட்டு, கர்த்தரை துதித்தபடி வந்தார்கள்.
.
ஒரு முறை உலகபிரசித்திப் பெற்ற தேவ ஊழியர் பில்லிகிரகாம் இந்தியாவிற்கு வந்திருந்தபோது டோனாவூரில் கார்மைக்கேல் அம்மையாரை சந்திக்கச்சென்றிருந்தார். திரும்பும்போது அவரை ஜெபிக்க வேண்டினர். அவர் ஜெபித்த போது தேவனுடைய பிரசன்னம் அந்த அறையில் அளவில்லாமல் நிரம்பியிருந்தபடியால் அவர் தொடர்ந்து ஜெபிக்க முடியாமற்போயிற்று. ஏமி அம்மையார் ஜெபித்து முடித்தார்கள். மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்கிறதற்கு நிற்கக்கூடாமற்போயிற்று, கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று. - (1 இராஜாக்கள். 8:11)
.
நமது குறைகளில் நாம் முறுமுறுத்துக் கொண்டே இருக்கிறோம் அல்லவா? நமது குறைகளிலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே நமது பெலன் என்று நாம் கர்த்தரை துதிக்க கற்றுக் கொண்டால் தேவ பிரசன்னம் நம்மை அளவில்லாமல் சூழ்ந்து கொள்ளும்;

கருத்துகள் இல்லை: