இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.(ரோமர் 5:12) |
சிலுவையில் அறையப்படுவது ஒரு கொடிய நிகழ்ச்சி. அதனால் ஏற்பட்ட உடல்சார்ந்த வேதனையைக் கற்பனை செய்து பார்ப்பதே இயலாது. முதலில் இயேசுவைக் கசையால் அடித்தார்கள். பின் மரத் தடிகளில் அவரது கைகளையும் கால்களையும் ஆணிகளால் அறைந்தார்கள். நேராக உயர்த்தப்பட்ட தடியில் ஒரு சிறிய முன்துண்டை இணைத்து, இயேசுவின் உடலின் மேற்பகுதி கீழே தொங்கி விழாதவண்ணம் தடுப்பதற்காக வழிசெய்தார்கள்.
மருத்துவ நோக்கில் பார்க்கும் போது இயேசுவின் சாவுக்கு உடனடி காரணமாக அமைந்தது யாது? நற்செய்திகள் தரும் தகவல்களின் அடிப்படையில் இந்த மருத்துவ காரணத்தை இக்கால அறிஞர்கள் நிர்ணயித்துள்ளனர். அதாவது, இயேசு சிலுவையில் அறையப்பட்டுத் தொங்கிக்கொண்டிருந்த போது, அவருக்குக் குருதி விம்மிய முறையில் மாரடைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். நிச்சயமாக, மூச்சுத் திணறல் ஏற்பட்டது. களைப்பின் மிகுதியாலும் சோர்வாலும் உடலில் போதிய நீர் இல்லாது போனது. இரத்த ஓட்டம் தடைபட்டது. தாழிரத்தப் பரிமான அதிர்ச்சி ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக