இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
(வெளிப்படுத்தல் 3:20)

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

புனித வேதாகமத்தை பற்றீய தொகுப்பு

வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.(லூக்கா 21:33)
விலியம் ( புனித வேதாகமம், பைபிள்), யூதர் மற்றும் கிறித்தவர்களது புனித நூலாகும். பல தனித்தனி நூல்களை உள்ளடக்கிய விவிலியம் ஒரு நூல்தொகுப்பாக இருப்பதோடு, உலகில் அதிகளவு மொழிகளுக்கு
விபெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. ஒரே பெயரை கொண்டிருப்பினும் யூதரது மற்றும் கிறிஸ்தவரது விவிலியங்கள் வெவ்வேறானவையாகும். கிறித்தவரும் யூதரும் ஏற்றுக்கொள்ளும் விவிலியப் பகுதி கிறித்தவர்களால் பழைய ஏற்பாடு என்று அழைக்கப்படுகிறது. அதை எபிரேய விவிலியம் என்றும் கூறுவர். கிறித்தவரும் யூதரும் விவிலியத்தைக் கடவுள் வெளிப்படுத்திய புனித வாக்கு என நம்புகின்றனர்.
இக்கட்டுரை கிறித்தவ விவிலியத்தைக் குறித்து மட்டுமே கருத்திற்கொள்ளும்.
உலகத்திலேயே திருவிவியம் எனும் 'பைபிள்' தான் அதிக மொழிகளில் (சுமார் 2,100) மொழிபெயற்கப்பட்டு அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட 1815ஆம் ஆண்டிற்குப் பின் சுமார் 500 கோடிக்கும் மேலான பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கிறித்தவ விவிலியம் இரு பெரும் பிரிவுகளை கொண்டுள்ளது. அவையாவன:
  • முதலாம் ஏற்பாடு அல்லது பழைய ஏற்பாடு (எபிரேய புனித நூல்கள்) மற்றும்
  • இயேசுவின் பிறப்புக்கு பின்னரான காலத்தை விளக்கும் புதிய ஏற்பாடு என்பனவாகும்.
விவிலியத்தின் மொழிபெயர்ப்பு மாறுப்பாடுகள் காணப்படுகின்றன.

விவிலிய வரலாறு

விவிலியத்திலுள்ள நூல்கள் வரலாற்றின் ஒவ்வொரு பகுதியை குறித்து கூறுகின்றன. விவிலியத்தில் கூறப்பட்டுள்ள வரலாற்றை பின்வருமாறு சுருக்கலாம்.
  1. கடவுள் உலகையும் அதிலுள்ள சகலத்தையும் படைத்தார். மனிதனை அவர் சாயலாக படைதார். உலகம் பாவமற்றிருந்தது. மனிதன் அவரைவிட்டு நீங்கி பாவம் செய்கிறான்.
  2. மனிதனை பாவத்திலிருந்து மீட்க கடவுள் மனிதனுக்கு விளங்கும் வகையில் அவரை வெளிப்படுத்துகிறார்.
  3. கடவுள் அபிரகாமை அழைத்து புதிய நாட்டை கொடுக்கிறார். அவருக்கு பெரிய சந்ததியை கொடுப்பதாகவும் வாக்களிக்கிறார்.
  4. கடவுள் மோசே வழியாக சட்டங்களை கொடுக்கிறார்.
  5. இஸ்ரவேல் மக்கள் பாவம் செய்வதும் பின்னர் கடவுளிடம் திரும்புவதுமாக சிலகாலம் கழிகிறது. அவர்கள் கடவுளின் சட்டங்களை மென்மேலும் அறிந்துகொள்கின்றார்கள்.
  6. இயேசு இவ்வுலகில் பிறக்கிறார். மோயீசனின் சட்டங்களை தெளிவுபடுத்தி அன்பு என்னும் புதிய சட்டத்தை கொடுக்கிறார்.
  7. அவரது சிலுவை மரணமும் உயித்தெலுதலும்.
  8. இயேசுவின் சீடரும் ஆதி கிறிஸ்தவரும்.

  • பொதுவான நூல்கள்: இவை எல்லா கிறிஸ்தவ பிரிவினரின் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டிலும் காணப்படும் நூல்களாகும். மொத்தம் 39 நூல்கள் இதில் அடங்கும். சீர்திருத்த திருச்சபைகள் இநூல்களை மட்டுமே தமது பழைய ஏற்பட்டில் கொண்டுள்ளன.
    • ஆகம நூல்கள் 5
    • வரலாற்று நூல்கள் 12
    • இலக்கிய நூல்கள் 5
    • தீர்க்கதரிசன நூல்கள் 17
  • கத்தோலிக்க விவிலியம்: பொதுவான நூல்களுக்கு மேலதிகமாக சில நூல்கள் கத்தோலிக்க விவிலியத்தில் காணப்படுகின்றன. இவை மொத்தம் 7 நூல்களாகும். யெருசலேமின் இரண்டாவது ஆலயத்து கால நூல்களாகும். பொதுவான நூல்களையும் சேர்த்து மொத்தம் 46 நூல்கள் கத்தோலிக்க விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் காணப்படுகிறது. மேலும் கத்தோலிக்க விவிலியத்தில், சீர்திருத்த திருச்சபைகளுடன் பொதுவாக கொண்டுள்ள 39 நூல்களில் சில மேலதிக அதிகாரங்களும் காணப்படுகின்றன.
  • மரபு வழி திருச்சபை விவிலியம் : இவை கத்தோலிக்க பழைய ஏற்பாட்டு நூல்களுக்கு மேலதிகமாக 5 நூல்களை ஏற்றுக்கொள்கின்றன. மொத்தம் 51 நூல்கள் மரபு வழி பழைய ஏற்பாட்டிலுண்டு.

புதிய ஏற்பாடு


புதிய ஏற்பாடு இயேசுவின் பிறப்புடன் ஆரம்பிக்கிறது. இவ்வேற்பாட்டில் 27 நூல்கள் காணப்படுகின்றன. இவையனைத்திலும் இயேசு மையகர்த்தாவாக இருக்கிறார். கிறிஸ்தவத்தின் எல்லா உட்பிரிவினரும் இவற்றை மாற்றமின்றி ஏற்றுக்கொள்கின்றனர். புதிய ஏற்பாடு விவிலியத்திலுள்ள நூல்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை: