இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
(வெளிப்படுத்தல் 3:20)

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

புனித வெள்ளி




புனித வெள்ளி (Good Fridayகிறிஸ்தவர்களின் சமய ஆண்டில் ஒரு முக்கியமான நாளாகும். இது உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு முன்னரான வெள்ளிக்கிழமையில் அனுசரிக்கப்படும். இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூருமுகமாக இது அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தில்
 கிறிஸ்தவர் விசேட வழிபாடுகளில் ஈடுபடுவர். இவை பொதுவாக இயேசு சிலுவையில் அறையப்படுவதை நினைவுகூரும் வகையிலிருக்கும். கத்தோலிக்கர் இந்நாளில் நோன்பிருந்து வெள்ளாடை அணிந்து சிலுவைப்பாதையில் பங்கெடுபது வழக்கமாகும். இத்தினமானது தூயவெள்ளி, நீண்ட வெள்ளி, சோக வெள்ளி, பெரிய வெள்ளி என இடத்துக்கிடம் வேறு பெயர்களை கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை: